தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் கல்வி நிறுவனத்தின் மீது விபத்து காப்பீடு மோசடி வழக்கு

தனியார் கல்வி நிறுவனத்தின் மீது விபத்து காப்பீடு மோசடி வழக்கு

தனியார் கல்வி நிறுவனத்தின் மீது விபத்து காப்பீடு மோசடி வழக்கு


ADDED : ஜூன் 14, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : ரூ.92.5 லட்சம் விபத்து காப்பீடு பெற போலி இன்சூரன்ஸ் பாலீசி தயார் செய்ததாக தனியார் கல்வி நிறுவனம் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அபிேஷகப்பாக்கம், புதுநகரை சேர்ந்த பார்த்தசாரதி, 23.இவர், கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி தனது உறவினர் மகளுடன் பல்சர் பைக்கில், டி.என்.பாளையம் - அபிேஷகப்பாக்கம் வழியாக வந்தபோது, பின்னால் வந்த தனியார் பள்ளி வாகனம் பைக் மீது மோதியது.

அதில், பார்த்தசாரதி, அவருடன் வந்த ஏழுமலை மகள் ராகவர்தினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தெற்கு, போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விபத்தில் படுகாயமடைந்த ராகவர்தினியின் தந்தை 92.5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இதற்கிடையே, வழக்கில் தாக்கல் செய்த தனியார் பள்ளி வாகனத்தின் கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனியின் பாலிசி ஆவணத்தை, அந்த நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த ஆவணம் போலியானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்நிறுவன இணை மேலாளர் ஷியாம் சுந்தர், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் அளித்த புகாரில் பேரில், தனியார் கல்வி நிறுவனம் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us