/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திடீர்தீ விபத்து வீடு எரிந்து சேதம்
/
திடீர்தீ விபத்து வீடு எரிந்து சேதம்
ADDED : பிப் 06, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : மின்கசிவு காரணமாக கூலித்தொழிலாளியின் கூரை வீடு எரிந்து சாம்பாலானது.
நெட்பாக்ககம் அடுத்த பனையடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 45; கூலித்தொழிலாளி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு 7:10 மணிக்கு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து கரையாம்புத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

