/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கற்றல் திறனை ஊக்குவிக்கிறது 'பட்டம்' இதழ்; ஆச்சார்யா கல்வி குழும சேர்மன் அரவிந்தன் புகழாரம்
/
கற்றல் திறனை ஊக்குவிக்கிறது 'பட்டம்' இதழ்; ஆச்சார்யா கல்வி குழும சேர்மன் அரவிந்தன் புகழாரம்
கற்றல் திறனை ஊக்குவிக்கிறது 'பட்டம்' இதழ்; ஆச்சார்யா கல்வி குழும சேர்மன் அரவிந்தன் புகழாரம்
கற்றல் திறனை ஊக்குவிக்கிறது 'பட்டம்' இதழ்; ஆச்சார்யா கல்வி குழும சேர்மன் அரவிந்தன் புகழாரம்
ADDED : ஜன 29, 2025 06:18 AM
புதுச்சேரி :   புதுச்சேரி 'தினமலர் -பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்திய மெகா வினாடி வினா இறுதி சுற்று போட்டியில் பங்கேற்ற ஆச்சார்யா கல்வி குழும சேர்மன் அரவிந்தன் பேசியதாவது;
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் புத்தகம், மதிப்பெண்ணை தாண்டி படிப்பது, வாசிப்பது குறைவாக உள்ளது. பொது அறிவை ஊக்குவிக்கவும், சிந்தனைகளை உருவாக்கும் செயல்பாடுகள் கல்வி திட்டத்தில் இருந்து தள்ளி வந்து விட்டோம்.
ஏராளமான தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் எந்த வயதில் எந்த மாதிரியான தகவல்கள் மாணவர்களுக்கு செல்ல வேண்டும். அந்த தகவல் அறிவை, ஆற்றலாக மாற்றுவதற்கான பாடத் திட்டம் ஏதும் இல்லை.
அந்த காலியிடத்தை பூர்த்தி செய்யும் வகையில், 'தினமலர்- பட்டம்' இதழ் அற்புதமான ஏற்பாட்டை செய்துள்ளதற்கு வாழ்த்துக்கள்.
போட்டிக்கு வந்ததே வெற்றி தான். வெற்றி பெறுவோருக்கு அளிக்கும் பரிசுகளை தாண்டி, மாணவர்களின் புகைப்படங்கள் நாளிதழில் வரும்போது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவர்.
வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை முக்கியம். படித்தால் வெற்றி பெற முடியும், மதிப்பெண் எடுப்பது மட்டும் இன்றி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை 'பட்டம்' இதழ் செய்கிறது.
படிப்பது வேறு, கற்றுக் கொள்வது வேறு. தினமும் கற்றுக் கொண்டே இருந்தால் சிறப்பாக இருப்பீர்கள். சீர் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சமூகத்தில் ஆசிரியர்கள், சட்டம் இயற்றுவோர், மனித உரிமைகள் கவனிப்போர் சீர் செய்தால் சமுதாயம் நன்றாக இருக்கும்.
ஏ.ஐ., மூலம் நிறைய தகவல்கள் கிடைக்கிறது. ஆனால், ஆசிரியர்கள் அளிக்கும் பக்குவம், பண்பு அதிகம் தேவைப்படுகிறது. ஆண்டுதோறும் பட்டம் இதழ் படித்து கற்றுக் கொண்டு, இத்தகைய போட்டி மூலம் அங்கீகாரம், பாராட்டு கிடைப்பது கொண்டாட்டமாக உள்ளது. மாணவர்கள் சீரும் சிறப்பும், செழிப்பும் பெற வாழ்த்துக்கள்.
இவ்வாறு அரவிந்தன் பேசினார்.

