/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாதனையாளர் விருது வழங்கும் விழா
/
சாதனையாளர் விருது வழங்கும் விழா
ADDED : நவ 04, 2024 05:49 AM

புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் ஓவிய கலைக்கூடம் சார்பில், சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
தமிழ் சங்க வளாகத்தில் நடந்த நிகச்சிக்கு கலைக்கூடத்தின் நிறுவனர் திலக் தலைமை தாங்கினார்.
மக்கள் நீதி மையத்தின் பொதுச் செயலாளர் சந்திரமோகன், பாவலர் சரவணன், படைப்பாளர் இயக்க நிறுவனர் செல்வம், சமூக சமநிலை செயல்பாட்டாளர் மேகராஜ், ஆதி திராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மதர்ஸ் முதியோர் இல்ல நிறுவனர் பரணிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் கலந்து கொண்டு, சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.