தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளையில் ஈடுபட்ட 7 பேர் அதிரடி கைது

ரகளையில் ஈடுபட்ட 7 பேர் அதிரடி கைது

ரகளையில் ஈடுபட்ட 7 பேர் அதிரடி கைது


UPDATED : அக் 11, 2026 08:16 PM

ADDED : அக் 11, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 08:16 PM ADDED : அக் 11, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் ரகளையில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சின்ன ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கடலுார், கொடுக்கன்பாளையம் ஜெயக்கிருஷ்ணன் 20; மணமேடு மேம்பாலம் அருகே ரகளையில் ஈடுபட்ட நெல்லிக்குப்பம் உமர்அலி, 26, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட மஞ்சக்குப்பம் ராஜசிவா, 27, என்பவரை கைது செய்தனர்.

நோணாங்குப்பம் பகுதியில் 2 பேர் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபடுவதாக, அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

போலீசார் அங்கு விரைந்து சென்று, ரகளையில் ஈடுபட்ட வீராம்பட்டினம் ரூபன்,28; அரியாங்குப்பம் வெங்கடேசன்,42, ஆகியோரை கைது செய்தனர்.

அதே போல், கொருக்கன்மேடு பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட தவளக்குப்பம் லுாக்காஸ்,49; அபிேஷகப்பாக்கம் வேலு,52, ஆகியோரை தவளக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us