UPDATED : அக் 11, 2026 06:53 PM
ADDED : அக் 11, 2026 06:40 PM
புதுச்சேரி: புதுச்சேரி இந்து முன்னணி சார்பில கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்ற தமிழக அரசை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சுதேசி மில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் நாகராஜ் வரவேற்றார். இந்து முன்னணி முருகையன் கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.
மாநில பொருளாளர் செந்தில்முருகன், மாநில செயலாளர் தியாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் உத்திரவேல், கணேஷ் ஞானசம்பந்தன், ஜெயகுமார், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாராயணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, தீபம் ஏற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
