ADDED : பிப் 01, 2024 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் மேல்நிலைப் பள்ளியில் மின்னல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது குறித்து மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மாதத்தின் கடைசி நாளை புத்தக பை இல்லாத நாளாகஅறிவித்துள்ளது.
அதன்படி, இளங்கோ அடிகள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்கள் குழுவாக சேர்ந்து புத்தக பை இல்லாத தினத்தில் மின்னலினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் செயல்திட்டம் உருவாக்கி செயல்விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி துணை முதல்வர் கோகிலாம்பாள், ஆசிரியர்கள் இளமுருகன், சொர்ணாம்பிகை, ஸ்ரீராம்,ஞானம் கலந்து கொண்டனர்.