/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆற்றில் ஆகாய தாமரை அகற்ற நடவடிக்கை தேவை
/
ஆற்றில் ஆகாய தாமரை அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : அக் 20, 2025 12:22 AM

அரியாங்குப்பம்: நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில், ஆகாயத்தாமரைகள் அதிகமாக படர்ந்துள்ளதால், தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது.
புதுச்சேரி - கடலுார் சாலையை, இணைக்கும் முக்கிய பாலமாக சுண்ணாம்பாறு பாலம் உள்ளது. வீடூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், இந்த ஆறு வழியாக சென்று, கடலுக்கு செல்கிறது. பாலத்தின் அருகில், அதிகளவில், ஆகயத்தாமரைகள் படர்ந்துள்ளன. அதனால், ஆற்று தண்ணீர் சுலபமாக செல்ல முடியாமல் உள்ளது.
வடக்கு கிழக்கு பருவமழை துவங்கி, புதுச்சேரியில் மழை பெய்து வருவதால், ஆற்றில் மழை நீர் செல்ல ஆகத்தாமரைகள் தடையாக உள்ளது. பொதுப்பணித்துறையினர் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், புதிய மற்றும் பழைய பாலத்தின் மர செடிகள் முளைத்து வருவதால், பாலத்தை சேதம் அடைவதை தடுக்க அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.