/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிறுத்தப்பட்ட பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க நடவடிக்கை தேவை
/
நிறுத்தப்பட்ட பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க நடவடிக்கை தேவை
நிறுத்தப்பட்ட பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க நடவடிக்கை தேவை
நிறுத்தப்பட்ட பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 02, 2025 04:00 AM
நெட்டப்பாக்கம் : புதுச்சேரியிலிருந்து நெட்டப்பாக்கம் வழியாக கரையாம்புத்தார் கிராமத்திற்கு செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியிலிருந்து வில்லியனுார், கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், கல்மண்டபம், நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார், பனையடிக்குப்பம், வழியாக கரையாம்புத்துார் கிராமத்திற்கு பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கப்பட்டு வந்தது. கிராம புறங்களில் இயக்கப்பட்டு வந்த இந்த பஸ் மூலம் அரசுக்கு கனிசமான வருவாய் கிடைத்து வந்தது.
இந்நிலையில் பி.ஆர்.டி.சி., பஸ்கள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படததால், இப்பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்கு உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து இரவு 10.30 மணிக்கு கரையாம்புத்துார் கிராமத்திற்கு பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கப்பட்டு வந்ததால் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த வழித்தடத்தில் பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க வேண்டும் என சமபந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி புதுச்சேரியிலிருந்து நெட்டப்பாக்கம் வழியாக கரையாம்புத்துார் கிராமத்திற்கு பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

