அனுமதியின்றி பேனர் வைத்தால் நடவடிக்கை: கலெக்டர் குலோத்துங்கன் எச்சரிக்கை
அனுமதியின்றி பேனர் வைத்தால் நடவடிக்கை: கலெக்டர் குலோத்துங்கன் எச்சரிக்கை
UPDATED : அக் 10, 2026 02:41 AM
ADDED : அக் 10, 2026 02:37 AM
புதுச்சேரி: அனுமதியின்றி பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார் .
புதுச்சேரியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம், புதுச்சேரி கலெக்டர் அலுவலத்தில் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கள் தலைமை தாங்கினார்.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பொதுமக் க ளுக்கு இடையூறாக இரு க்கும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்- அவுட்டுகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
அனுமதியின்றி செயல்படும் இருசக்கர வாகன வாடகை கடைகள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக் கப்பட்டது.
குறிப்பிட்டுள்ள நாட்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி பேனர் வைத்திருப்பவர்களும், சட்டவிரோதமாக வாகன வாடகை கடைகள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்களை இயக்குபவர்களும் தாங்களாகவே முன்வந்து அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
