/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது'
/
'நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது'
ADDED : ஜன 24, 2025 05:39 AM
புதுச்சேரி: நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது என, அமைச்சர் சாய் சரவணன்குமார் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால் மீனவர் கிராம பகுதிகளில் சாலை அமைக்கும் பணியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் துவக்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் 6,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மழை வெள்ள நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
தொடர்ந்து, விஜய் அரசியல் தாக்கம் புதுச்சேரியில் இருக்குமா என்ற கேள்விக்கு, நடிகர் விஜய் அரசியல் புதுச்சேரியில் எடுபடாது; பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் மட்டுமே புதுச்சேரியில் எடுபடும், என, கூறிய அவர், அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார்.

