/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விருதை கோவிலில் நடிகை நளினி தரிசனம்
/
விருதை கோவிலில் நடிகை நளினி தரிசனம்
ADDED : ஜன 28, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நடிகையை பக்தர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு நடிகர் ராமராஜன் மனைவியும், நடிகையுமான நளினி நேற்று வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக அவர், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கிருந்த பெண் பக்தர்கள் ஏராளமானோர் சூழ்ந்து கொண்டதால், நளினியை கோவில் ஊழியர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.