
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நெல்லித்தோப்பு சக்தி நகர் சந்து முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் மருத்துவர் செந்தில் தலைமையில் இலவச அக்கு பஞ்சர் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இலவச அக்கு பஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் செல்வம், ஓம்சக்தி சேகர் ஆகியோர் இலவச மருத்துவ அட்டைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ராஜன், கணேசன், ரமேஷ், முனிரத்தினம், கணேசன், அருள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.