தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிரியாணி கேட்டு 'அடம்' வேட்பாளர்களை கதறல்

 பிரியாணி கேட்டு 'அடம்' வேட்பாளர்களை கதறல்

 பிரியாணி கேட்டு 'அடம்' வேட்பாளர்களை கதறல்


ADDED : மார் 29, 2026 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 10:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் களை கட்டி வருகிறது. ஓட்டு கேட்க செல்லும் ஒவ்வொரு வேட்பாளரும், பெரிய கூட்டத்துடன் சென்றால் தான் தங்களுக்கு ஓட்டு கிடைக்கும் என்ற நப்பாசையில் கூட்டம், கூட்டமாக சென்று ஓட்டு கேட்டு வருகின்றனர்.

வேட்பாளருடன் பிரசாரத்திற்கு வரும் 'திடீர் ஆதரவாளர்கள்' மதியம் 12:30 மணி ஆனதும் 'தலைவரே மதியம் பிரியாணி சொல்லிடுங்க' என கோரசாக குரல் கொடுக்கின்றனர். சாதாரணமாக ஒரு பிரியாணி விலை ரூ.100 தாண்டி விற்கும் நிலையில், பிரியாணி செலவைக் கண்டு வேட்பாளர்கள் கதறி வருகின்றனர்.

மேலும் டீ, கூல்டிரிங்ஸ், தண்ணீர் பாட்டில், மாலையில் ஸ்நாக்ஸ், போதாக்குறைக்கு, பிரசாரம் முடிந்து இரவு வீடு திரும்புவதற்கு முன் ரூ.500 பெற்றுக் கொண்ட பின்பே செல்கின்றனர். தினசரி ஒவ்வொரு வேட்பாளரும் 5 முதல் 8 லகரம் வரை சர்வ சாதாரணமாக செலவாகிறது.

தேவையின்றி கூட்டமாக வரும் திடீர் ஆதரவாளர்களை பிரசாரத்திற்கு வர வேண்டாம் என்றால், உடனடியாக எதிர் வேட்பாளரிடம் இணைந்து பிரசாரம் செய்கின்றனர். இதனை எப்படி தடுப்பது என புரியாமல் வேட்பாளர்கள் தவித்து கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us