UPDATED : அக் 08, 2026 05:42 PM
ADDED : அக் 08, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் மதுபோதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் திருப்பட்டினம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வநாதன் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டார்.அப்போது மது போதையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசிய நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் மதனம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் கிருஷ்ணகலைச்செழியன், 19; என்பது தெரியவந்தது.
புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.
