UPDATED : அக் 08, 2026 05:42 PM
ADDED : அக் 08, 2026 03:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வீட்டில் இருந்த பெண் திடிரென இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அமுதவள்ளி 50, இவருக்கு எலும்பில் கட்டி வந்ததால் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தொடர்ந்து அவரது மூக்கில் சதை வளர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 3.00 மணியளவில் அவரது அறையில் அமுதவள்ளி இறந்து கிடந்தார்.
புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
