/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு
/
5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு
ADDED : நவ 04, 2025 01:43 AM
புதுச்சேரி: ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் 19 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியில் உள்ளனர். இவர்களில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் துறைகள் கூடுதல் பொறுப்புடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சி ஆணையர் ஸ்ரீகிருஷ்ண மோகன் உப்புவிற்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகாரத் துறை கவனிப்பார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
தொழிலாளர் துறை செயலர் ஸ்மிதாவிற்கு சமூக நலம், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலன் துறைகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் பான்கேர் அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு செயலர் முகமது ஹசன் அபித், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறை செயலர் விக்ராந்த் ராஜாவிற்கு குடிமை பொருள் வழங்கல் துறை, கூட்டுறவு, சட்ட துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர், ஏ.எப்.டி., சுதேசி, பாரதி மில் மேலாண் இயக்குநராகவும், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிக வரி செயலாளர் சவுத்ரி முகமது யாசின், சுகாதார குடும்ப நலன், பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு துறைகள் கூடுதலாக அளிக்கப் பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பினை கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.

