/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.எம்.ஏ., அடித்தளத் தேர்வில் ஆதித்யா கல்லுாரி சாதனை
/
சி.எம்.ஏ., அடித்தளத் தேர்வில் ஆதித்யா கல்லுாரி சாதனை
சி.எம்.ஏ., அடித்தளத் தேர்வில் ஆதித்யா கல்லுாரி சாதனை
சி.எம்.ஏ., அடித்தளத் தேர்வில் ஆதித்யா கல்லுாரி சாதனை
ADDED : பிப் 26, 2024 05:13 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் 85 பேர் சி.ஏ., சி.எம்.ஏ., அடித்தளத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, இயந்திர தொழில்நுட்பம் மற்றும் டேட்டா சயின்ஸ், விஷூவல் கம்யூனிகேஷன் போன்ற பாடங்களை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு இணையாக நடத்தி வருகிறது.
இளங்கலை பட்டதோடு ஒருங்கிணைந்த சி.ஏ., சி.எம்.ஏ., ஏ.சி.சி.ஏ., போன்ற தொழில்முறை கல்வி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுக்கான பயிற்சிகளும் அளிக்கிறது. டூயல் பட்டம் படிப்பதற்கு ஏற்ப இளங்கலை பட்டத்தோடு ஐ.ஐ.டி., போன்ற முன்னனி கல்வி நிறுவனங்களின் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கிறது.
கடந்த டிசம்பரில் நடந்த சி.எம்.ஏ., அடித்தளத் தேர்வில் புதுச்சேரி ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் 74 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். மாணவிகள் கிருத்திகா 400க்கு 329, யுவஸ்ரீ-301, லக்சயா -288, மாணவர் சண்முகம் சஞ்ஜீத்- 270 மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் முதல் நான்கு இடங்களை பிடித்தனர்.
சாதனை படைத்த மாணவர்களை ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்யா நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் பாராட்டினர். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

