/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சாதனை விழா கொண்டாட்டம்
/
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சாதனை விழா கொண்டாட்டம்
ADDED : ஜூலை 09, 2025 08:51 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஆதித்யா கல்லுாரியின் 2022-25ம் ஆண்டின் முதாலாமாண்டு மாணவர்களின் சாதனை விழா கொண்டாடப்பட்டது.
ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த்,வித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் கல்லுாரியின் சி.ஏ., மற்றும் சி.எம்.ஏ., தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
இம்மாணவர்கள் முதலாமாண்டு கல்வியுடன், யோகா, தினமும் ஏழு மணி நேரம் சுயகற்றல் என மன அழுத்தமின்றி கல்வி கற்று சாதனை படைத்துள்ளனர். முதலாமாண்டு மாணவர்கள் 24 பேர் சி.ஏ., பவுண்டேஷன் தேர்வு எழுதி, அனைவரும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றனர்.
பவுண்டேஷன் தேர்விற்குப் பிறகு, நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் இன்டர்மெடிடேட்தேர்வுகளுக்குத் தயாராக்கப்பட்டனர். அதில், 2023ம் ஆண்டு 18 பேரும், 8 பேர் சி.ஏ., இன்டர்மெடிடேட் குருப் 1ல் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றனர். 7 பேர் குருப் 2 விலும் வெற்றி பெற்றனர். 2ம் ஆண்டு மாணவர்கள் 50 பேரும், மூன்றாமாண்டு மாணவர்கள் 35 பேரும், நான்காமாண்டு மாணவர்கள் 55 பேரும், சி.ஏ., மற்றும் சி.எம்.ஏ., பவுண்டேஷன்வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
இம்மாணவர்கள் பி.காம்., புதுச்சேரி பல்கலைகழகத்தில் படித்து,100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இங்கு கல்வியும், வாழ்க்கை கல்விக்கான பயிற்சியும், இரண்டுமே ஒரே நேரத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. சி.ஏ., மாணவர்கள் மட்டும் அல்லாது, பி.காம்., மாணவர்கள் பல நிறுவனங்களில்வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.