sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சி.ஏ., தேர்வில் ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் தொடர் சாதனை

சி.ஏ., தேர்வில் ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் தொடர் சாதனை

சி.ஏ., தேர்வில் ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் தொடர் சாதனை


ADDED : பிப் 22, 2024 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2024 11:44 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள், சி.ஏ., அடித்தளத் தேர்வில் தேர்ச்சி பெற்று தொடர் சாதனை படைத்துள்ளனர்.

புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு, இயந்திர தொழில்நுட்பம் மற்றும் டேட்டா சயின்ஸ், விஷூவல் கம்யூனிகேஷன் போன்ற பாடங்களை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு இணையாக நடத்தி வருகிறது.

இளங்கலை பட்டத் தோடு ஒருங்கிணைந்த சி.ஏ., சி.எம்.ஏ., ஏ.சி.சி.ஏ., போன்ற தொழில்முறை கல்வி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுக்கான பயிற்சிகளும் அளித்து வருகிறது. மேலும், டூயல் பட்டம் படிப்பதற்கு ஏற்ப இளங்கலை பட்டத்தோடு ஐ.ஐ.டி., போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களின் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்., கம்ப்யூட்டர் சயின்ஸ், தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பரில் நடந்த சி.ஏ., அடித்தளத் தேர்வில் புதுச்சேரி ஆதித்யா கல்லுாரியை சேர்ந்த 13 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் கவிபிரியா 279, லிங்கேஸ்வரி 256, ரோஷினி 253 மற்றும் காவியா 240 மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் முதல் நான்கு இடங்களை பிடித்தனர்.

கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் இதுவரை நடந்த சி.ஏ., அடித்தளத் தேர்வில் புதுச்சேரி ஆதித்யா கல்லுாரியை சேர்ந்த 25 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வில் சாதனை படைத்த அனைத்து மாணவர்களையும் ஆதித்யா கல்லுாரி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்யா நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். இதில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us