தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதித்யா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'

 ஆதித்யா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'

 ஆதித்யா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வில் 'சென்டம்'


ADDED : ஏப் 17, 2026 03:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 03:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 461 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.

பள்ளி அளவில் மாணவர்கள் பிரசிதா, ஸ்ரீதாபாத் ஆகியோர் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், யுவன்பிரபாகர், கவுஷல் ஆகியோர் 491 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், யுக்திகா 490 மதிப்பெண் எடுத்த மூன்றாமிடம் பிடித்தனர்.

அறிவியலில் சவுமியா தர்மராஜ், ஸ்ரீதாபாத், தட்சணாமூர்த்தி ஆகியோரும், சமூக அறிவியலில் ஜோஷித்தா, தமிழில் ராகுல் ஆதித்யா, யுவன்பிரபாகர், செம்பிறை, அனிருத்ரன், தனபிரியா, கிேஷார், யோஷினி, தன்வி சிவராமன் ஆகியோரும், செயற்கை நுண்ணறிவியலில் கிருஷ்ணா, ரித்விக்கா, வசந்தகுமார், ஸ்ரீசக்தி, ஸ்ரீதாபாத், யுவன் பிரபாகர், பிரஷித்தா, சுவாதி, லிங்கவேல், அகர்ஷணா, கவுஷல் ஆகியோர் என, மொத்தம் 22 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

பாடவாரியாக மொழிப்பாடத்தில் 187 பேரும், ஆங்கிலத்தில் 193, கணிதத்தில் 60, அறிவியலில் 70, சமூக அறிவியலில் 157 பேரும், தரவு கட்டமைப்பு பாடத்தில் 46 பேரும், செயற்கை நுண்ணறிவு பாடத்தில் 176 பேரும் 100க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர்.

அவர்களை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதாபூனமல்லி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஆதித்யா கல்வி குழுமத்தில் அகில இந்தி அளவில் நடக்கும் மருத்துவம் மற்றும் பொறியியல், வர்த்தகம், பட்டய கணக்காளர், ஐ.ஏ.எஸ்., ஆகிய நுழைவு தேர்வுகளுக்கு (நீட், ஜிப்மர், ஜெ.இ.இ., சி.ஏ.பவுண்டேஷன், வணிகம்) ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 6ம் வகுப்பு முதல் நடத்தப்பட்டு வருகிறது என, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us