/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
/
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 07, 2025 07:35 AM

புதுச்சேரி; புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியின் 20வது ஆண்டு விழா 'மாற்றத்தின் அலைகள்' எனும் கருத்தை மையமாக கொண்டு இரண்டு நாள் கொண்டாடப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி, ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி, ஆர்த்தி ஆனந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆதித்யா பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் 16 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரியில் 56 பேர், ஐ.ஐ.டி. - 8 பேர், ஐ.ஐ.ஐ.டி., -4 பேர், என்.ஐ.டி. -27 பேர், ஐ.ஐ.எஸ்.இ.ஆர். -1 (கொல்கத்தா), தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் 2 பேர், சாரணர் சாரணியர் இயக்கம் - 4 பேர், தேசிய மாணவர் படை -4 பேர் என, பல்துறையில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஆதித்யா பள்ளியில் 10 ஆண்டுகள் கல்வி பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஆதித்யா கலைத்துறை இயக்குநர் ராஜமாணிக்கம் ஒருங்கிணைப்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆண்டு விழாவில் 100 மழலையர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு, 100 பேர் பங்கேற்ற குழு இசை சங்கமம், மெகா கொயர், யோகா மற்றும் 54 பேர் பங்கேற்ற சுடுகளிமண் கண்காட்சி மற்றும் இயல், இசை, நாடகம், நாட்டியம் என முத்தமிழ் விழாவாக நடந்தது.

