தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெண்கலம்
தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெண்கலம்
ADDED : ஜூலை 10, 2026 01:49 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா பள்ளி மாணவர் கிரண்குமார் பஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் லவ்லி புரபொஷனல் பல்கலைக்கழகத்தில் 15வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி ஏழு நாட்கள் நடந்தது. இப்போட்டியில் அனைத்து மாநிலங்களிலில் இருந்து மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
இதில் புதுச்சேரி, ஆதித்யா பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர் கிரண்குமார் 52 கிலோ எடை சப்-ஜீனியர் பிரிவில் பங்கேற்றார்.
இவர் பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹரியானா அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி, ஆந்திரா அணியுடன் போட்டியிட்டு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவரை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்யநாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி, ஆர்த்தி, பள்ளி முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
இதற்காக நடந்த பாராட்டு விழாவில் கவர் னர் கைலாஷ்நாதன், பாண் டிச்சேரி அமெச்சூர் குத்துசண்டை கழகத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசங்கர், பொது செயலாளர் கோபு, துணைத் தலைவர் கேசவலு, பயிற்சியாளர் வசந்தராஜ் ஆகியோர் மாணவரை பாராட்டினர்.
