உலக அளவிலான ஒலிம்பியாட் தேர்வு ஆதித்யா வித்யாஷ்ரம் மாணவருக்கு தங்கம்
உலக அளவிலான ஒலிம்பியாட் தேர்வு ஆதித்யா வித்யாஷ்ரம் மாணவருக்கு தங்கம்
UPDATED : நவ 12, 2026 11:00 PM
ADDED : நவ 12, 2026 10:56 PM

புதுச்சேரி: உலக அளவில் இளையோர் வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் தேர்வில் தங்கப்பதக்கம் வென்ற ஆதித்யா வித்யாஷ்ரம் மாணவர் சித்தார்த்லஷ்மிஷாவிற்கு பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி கல்வித்துறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியின் மாணவர் சித்தார்த்லஷ்மிஷா, தாய்லாந்தின் உபோன்ராட்சதானி நகரில் நடைபெற்ற 5வது சர்வதேச இளையோர் வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் தேர்வில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடந்த இப்போட்டியில் இந்தியாவில் இருந்து 5 மாணவர்கள் பங்கேற்றனர். 25 நாடுகளை சேர்ந்த 104 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் புதுச்சேரி வித்யாஷம் மாணவர் சித்தார்த் லஷ்மிஷா தங்கப்பதக்கம் வென்றார். சாதனை படைத்த மாணவரை ஆதித்யா வித்யாஷ்ரம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் ஆனந்தன், பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யா நாராயண அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
கடந்தாண்டு ஆதித்யா பள்ளி நடத்திய நீட் மற்றும் ஜே.இ.இ., ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு மாணவர்கள் 81 பேர் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். ஜப்மரில் 17 மாணவர்கள், இந்திராகாந்தி மருத்துவ கல்லுாாயில் 17, தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லுாரியில் 7, அரசு இட ஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக் கல்லுாரியில் 40 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
மேலும் 17 மாணவர்கள் ஐ.ஐ.டி.,யிலும், 26 மாணவர்கள் என்.ஐ.டி.,யிலும், 2 மாணவர்கள் ஐ.ஐ.ஐ.டி.யிலும், ஒரு மாணவர் ஐ.ஐ.எம்.,மிலும் சேர்ந்துள்ளனர்.
