ADDED : ஜன 18, 2024 03:59 AM

திருக்கனுார்: மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருக்கனுாரில் ஆதியோகி சிவன் ரத ஊர்வலம் நேற்று நடந்தது.
கோயம்புத்துாரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் மார்ச் 8ம் தேதி மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு, பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், ஆதியோகி ரதம் ஊர்வலம் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது.
அதன்படி, திருக்கனுார் பகுதிக்கு நேற்று வந்த ஆதியோகி சிவன் ரதத்திற்கு கிராம பொதுமக்கள், ஈஷா யோகா மைய தன்னார்வலர்கள் பஜார் வீதியில் வரவேற்பு அளித்தனர். பின், திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஆதியோகி சிவன் ரதம் முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, திருக்கனுார் வணிகர் வீதி, பஜார் வீதி வழியாக ஆதியோகி சிவன் ரத ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் போது, ஏராளமான பொதுமக்கள் ஆதியோகியை தரிசனம் செய்தனர்.