/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிர்வாக சீர்திருத்த துறை உதவியாளர் காலியிடம் அரசு பணியாளர்களுக்கு வயது வரம்பு நீட்டிப்பு

ADDED : செப் 25, 2024 04:23 AM
புதுச்சேரி : புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் உதவியாளர் பதவிக்கான காலி பணியிடங்களில், அரசு பணியில் உள்ள தேர்வர்களுக்கு வயது உச்ச வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் உள்ள, 256 உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதவற்கான தேர்விற்கு, விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்களை பெற, கடந்த, 20,ம் தேதி, கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையில், கவர்னர் ஒப்புதலுடன் ஓ.பி.சி., எம்.பி.சி., இ.பி.சி., பி.சி.எம்., பி.டி., பிரிவுகளை சேர்ந்த, அரசு பணியில் உள்ள தேர்வர்களுக்கு உச்ச வயது வரம்பு, 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தளர்வு மற்றவர்களுக்கு பொருந்தாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வயது வரம்பு மட்டுமே, அவர்களுக்கு பொருந்தும். இணையதள வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், திருத்துவதற்கும் வரும் 30,ம் தேதி மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் அதற்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால், 0413-2233338, என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.