காஞ்சி மாமுனிவர் நிறுவனத்தில் சேர்க்கை கடிதம் வழங்கும் நிகழ்ச்சி
காஞ்சி மாமுனிவர் நிறுவனத்தில் சேர்க்கை கடிதம் வழங்கும் நிகழ்ச்சி
ADDED : செப் 24, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டப்படிப்பிற்கான சேர்க்கை அனுமதி கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2026–27ம் கல்வியாண்டிற்கான முனைவர் பட்டப் படிப்பில் சேர்வதற்காக அனுமதி கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிறுவன இயக்குனர் சசிகாந்த தாஸ் வரவேற்றார். அமைச்சர் நமச்சிவாயம், முனைவர் பட்டப் படிபிற்கான சேர்க்கை அனுமதி கடிதங்களை மாணவர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு வசதி துவக்கப்பட்டு, புதுபிப்பிக்கப்பட்ட மகளிர் கழிவறை திறக்கப்பட்டது. நிறுவன வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
