தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு பொய்யாகுளம் மக்கள் வரவேற்பு 

என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு பொய்யாகுளம் மக்கள் வரவேற்பு 

என்.ஆர்.காங்., வேட்பாளருக்கு பொய்யாகுளம் மக்கள் வரவேற்பு 


ADDED : செப் 24, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக் ஆனந்த், பொய்யக்குளம் பகுதியில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக, பொய்யாக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆரணி பெரியபாளையத்தம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், வேட்பாளர் அசோக் ஆனந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அசோக் ஆனந்திற்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேப்பு அளித்தனர். தொடர்ந்து, பொய்யாக்குளம் பகுதியில் வீடு, வீடாகச் சென்று பொது மக்களை சந்தித்து, ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அதில், என்.ஆர்.காங்., வேட்பாளர் அசோக் ஆனந்த், பொதுமக்களிடம் தனது மக்கள் சேவை மற்றும் தொகுதியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்து, தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவதற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது, அப்பகுதி மக்கள், தங்களது பகுதியில் தொடர்ந்து சேவையாற்ற அசோக் ஆனந்த் பணி மீண்டும் தேவைப்படுவதாக தெரிவித்தனர். மேலும், தேர்தலில் தங்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்வோம் என, உறுதியளித்தனர்.

மேலும், பொய்யாக்குளம் பகுதியில் நடந்த பிரசார நிகழ்வில் வேட்பாளர் அசோக் ஆனந்திற்கு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us