ADDED : மார் 14, 2024 06:08 AM
அ நிறம் | அளவு
பாகூர் : பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் துரைசாமி கருத்துரையாற்றினார்.
பாகூர் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் உமாராணி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பல்வேறு ஆலோசனை வழங்கினார்.
ஆசிரியர் செல்வக்குமார் தொகுப்புரையாற்றினார். ஏற்பாடுகளை, ஆசிரியை சாந்தி, சத்தியவதி, பிரபாவதி, தம்பி ராஜலட்சுமி, மஞ்சு, ரம்யா, கார்த்திகேயன், சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் பாலசேவிகா ஜெய நன்றி கூறினார்.
