ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை
ADDED : ஜூலை 06, 2026 02:47 AM
புதுச்சேரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அர்ஜூன் ராமக்கிருஷ்ணன் செய்திக்குறிப்பு;
ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மாணவ - மாணவியர் விடுதிகளில், 4ம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கான சேர்க்கை நடந்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
விடுதிகளில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. தகுதியும் விருப்பமும் உள்ள மாணவ, மாணவியர் தங்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலுள்ள அரசு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட விடுதி நல அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
