ADDED : ஜூலை 06, 2026 02:44 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரசு மருத்துவமனை எதிரில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதலியார்பேட்டை, பூந்தோட்ட வீதியைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன், 61. இவர், கடந்த மாதம் 19ம் தேதி காலை தனது ஸ்கூட்டரில் (பி.ஒய்.01.சி.எஸ்.5511) புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
ஸ்கூட்டரை மருத்துவமனை எதிரே நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்கு சென்றார். பின், திரும்பி வந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டரை காணவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில், பெரிய கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
