ADDED : ஜூலை 06, 2026 02:43 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் சந்திப்பில் புதிதாக பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்களை எஸ்.பி., சுப்ரமணியன் இயக்கி வைத்தார்.
கரிக்கலாம்பாக்கம் புறக்கா வல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகி ன்றன.
இதனால், அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அதனை தடுக்கும் பொருட்டு, கரிக்கலாம்பாக்கம் சாலை சந்திப்பில் போலீஸ் அறிவுறுத்தலின் பேரில் புதிதாக சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனை எஸ்.பி., சுப்ரமணியன் தலைமை தாங்கி, மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று இயக்கி வைத்தார்.
இதில், இன்ஸ்பெக்டர் கலைசெல்வம், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், பெரியசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
