/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழில்நுட்ப பல்கலையில் சேர்க்கை உற்பத்தி ஆய்வகம்
/
தொழில்நுட்ப பல்கலையில் சேர்க்கை உற்பத்தி ஆய்வகம்
தொழில்நுட்ப பல்கலையில் சேர்க்கை உற்பத்தி ஆய்வகம்
தொழில்நுட்ப பல்கலையில் சேர்க்கை உற்பத்தி ஆய்வகம்
ADDED : டிச 16, 2025 05:41 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்க்கை உற்பத்தி ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்அறக்கட்டளை மூலம் பல்கலைக்கழகம் மற்றும் தொழில் துறைகளின் இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மாணவர்கள், ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் சேர்க்கை உற்பத்தி ஆய்வகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.
பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் தலைமை தாங்கினார். இயந்திரவியல் துறை தலைவர் புகழ்வடிவு வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் சுந்தரமூர்த்தி, இயக்குனர் (அகாடமி) விவேகானந்தன் முன்னிலை வகித்தனர்.முன்னதாக அடிப்படை மின்ணனுவியல் மற்றும் அடிப்படை அளவீடுகள் ஆய்வகங்களை மேம்படுத்தி, புதிய தொழில்நுட்ப பயிற்சிகளை எம்.எம்.சி., நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது.

