/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ம.க., அதிரடி முடிவு புதுச்சேரி அ.தி.மு.க., 'ஷாக்' தென்னை மரத்தில் தேள் கொட்டி, பனை மரத்தில் நெறி கட்டியது
/
பா.ம.க., அதிரடி முடிவு புதுச்சேரி அ.தி.மு.க., 'ஷாக்' தென்னை மரத்தில் தேள் கொட்டி, பனை மரத்தில் நெறி கட்டியது
பா.ம.க., அதிரடி முடிவு புதுச்சேரி அ.தி.மு.க., 'ஷாக்' தென்னை மரத்தில் தேள் கொட்டி, பனை மரத்தில் நெறி கட்டியது
பா.ம.க., அதிரடி முடிவு புதுச்சேரி அ.தி.மு.க., 'ஷாக்' தென்னை மரத்தில் தேள் கொட்டி, பனை மரத்தில் நெறி கட்டியது
ADDED : மார் 20, 2024 02:11 AM
புதுச்சேரி, : பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இணைந்துள்ளதால், புதுச்சேரி அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதற்கு, லோக்சபா தேர்தலை தனித்து சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது தான் காரணம்.
கடந்த சட்டசபை தேர்தலில், புதுச்சேரியில் என்.ஆர். காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில், அ.தி.மு.க., தோல்வியை தழுவியபோதும், என்.ஆர். காங்., - பா.ஜ., கட்சிகள் அமோக வெற்றி பெற்ற கூட்டணி ஆட்சி அமைந்தன.
கூட்டணி ஆட்சியில் பங்கேற்க முடியாதபோதும், அரசுக்கு ஆதரவாக இங்குள்ள அ.தி.மு.க.,வினர் செயல்பட்டு வந்தனர். மேலும், அரசையும், ரங்கசாமியையும் விமர்சித்து காங்., மற்றும் தி.மு.க.,வினர் வெளியிடும் அறிக்கைகளுக்கு, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகனே அதிரடியாக பதில் அளித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறியது. இதன் எதிரொலியாக, புதுச்சேரியிலும் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதுபோன்ற சூழலில், நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி எதிரணியாகவும், பா.ஜ., தலைமையிலான கூட்டணி மூன்றாவது அணியாகவும் களம் இறங்க உள்ளன.
தேர்தலில் புதுச்சேரி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளரை களம் இறக்க அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க., செயலாளர் அன்பழகனை வேட்பாளராக நிறுத்துவதற்கும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் தொடர்ந்து எதிர்கட்சி வரிசையிலேயே உள்ளதால், தேர்தல் செலவுகளை எதிர்கொள்வது எப்படி என புதுச்சேரி அ.தி.மு.க.,வினர் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இதற்கிடையில், பா.ம.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதற்கு, அ.தி.மு.க., பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஒரு கட்டத்தில், கூட்டணியில் புதுச்சேரி தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படும் என்றும், வேட்பாளராக அக்கட்சியை சேர்ந்த வி.ஐ.பி., நிறுத்தப்பட உள்ளார் என்றும் தகவல்கள் பரவியது. இதனால், 'விடுதலை பெற்ற கதையாக' புதுச்சேரி அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., ஐக்கியமாகி விட்டது. இதனால், புதுச்சேரியில் அ.தி.மு.க.,வினரே நேரடியாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், உள்ளூர் அ.தி.மு.க., தலைமை 'அப்செட்' ஆகி உள்ளது.

