/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருந்து கொள்முதல் ஊழல் கோப்பு மாயம் சி.பி.ஐ.,யிடம் அ.தி.மு.க., பகீர் புகார்
/
மருந்து கொள்முதல் ஊழல் கோப்பு மாயம் சி.பி.ஐ.,யிடம் அ.தி.மு.க., பகீர் புகார்
மருந்து கொள்முதல் ஊழல் கோப்பு மாயம் சி.பி.ஐ.,யிடம் அ.தி.மு.க., பகீர் புகார்
மருந்து கொள்முதல் ஊழல் கோப்பு மாயம் சி.பி.ஐ.,யிடம் அ.தி.மு.க., பகீர் புகார்
ADDED : பிப் 08, 2024 05:06 AM
புதுச்சேரி: மருந்து கொள்முதல் ஊழல் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ஒப்புதல் கேட்டு அனுப்பிய கோப்பு காணவில்லை என, சி.பி.ஐ.,க்கு அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் புகார் அனுப்பியுள்ளார்.
மனுவில், புதுச்சேரி சுகாதார துறையில் மருந்து கொள்முதல் செய்வதில் ஊழல் நடக்கிறது. மக்கள் வரிப்பணத்தை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கொள்ளை அடித்து வருகின்றனர். அ.தி.மு.க.,வின் குற்றச்சாட்டை ஏற்று புதுச்சேரி சுகாதாரத்துறை தலைமை அதிகாரி, மருந்து கொள்முதல் ஊழல் தொடர்பாக உயர்மட்ட துறைரீதியிலான விசாரணை நடத்த கோப்பு தயாரித்தார்.
இந்த கோப்புக்கு அனுமதி கோரி, முதல்வருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பிய கோப்பை பல மாதமாக காணவில்லை. ஊழலை மறைக்க திட்டமிட்டு கோப்பை மறைத்துள்ளனர். புதுச்சேரி அரசின் கொள்முதலில் நடந்த ஊழலை மூடி மறைக்க பெயரளவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
மத்திய அரசு நிதியின் மூலம், தரம் இல்லாத மருந்துகளை வாங்கி, மக்களின் வரிப்பணத்தை ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள கொள்ளையடித்துள்ளனர்.
தங்களின் சுய லாபத்துக்காக மக்களின் உயிரை விலை பேசியுள்ளனர். தரமற்ற மருந்துகளால் புதுச்சேரி மாநில மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆட்சியாளர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். இப்பிரச்னை குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

