/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா பெயரில் கலாசார சீரழிவு அ.தி.மு.க., செயலாளர் குற்றச்சாட்டு
/
சுற்றுலா பெயரில் கலாசார சீரழிவு அ.தி.மு.க., செயலாளர் குற்றச்சாட்டு
சுற்றுலா பெயரில் கலாசார சீரழிவு அ.தி.மு.க., செயலாளர் குற்றச்சாட்டு
சுற்றுலா பெயரில் கலாசார சீரழிவு அ.தி.மு.க., செயலாளர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 30, 2024 05:54 AM
புதுச்சேரி : சுற்றுலா பெயரில் நடக்கும் கலாசார சீரழிவை தடுக்க வேண்டும் என அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.
மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;
புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு படித்த 9000 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காமல் ஏமாற்றி உள்ளனர். இந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அரசு முன்வர வேண்டும்.
புதுச்சேரியில் ஜி.எஸ்.டி., கலால் வரி வருவாய் அதிகமாக வருகிறது. எனவே, மஞ்சள் ரேஷன் கார்டுக்கும் காஸ் மானியம் ரூ. 300 வழங்க வேண்டும்.
புதுச்சேரி கலாச்சார சீர்கேட்டை நோக்கி செல்கிறது. அதிகாலை 3:00 மணிக்கு ரெஸ்ட்ரோ பார் திறக்கப்படுகிறது. ஆடை கட்டுப்பாடு சீர்கெட்டு போய், புதுச்சேரி என்றால் இப்படி தான் என அவ பெயரை அரசு ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளம்பெண் போதையில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
குடித்துவிட்டு கிழே விழுபவர்களை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்புபடை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா மூலம் அதிக வருமானம் என அதிகாரிகள் முதல்வருக்கு தவறான தகவல்களை கொடுக்கின்றனர். சுற்றுலா பெயரில் நடக்கும் கலாசார சீரழிவை தடுக்க வேண்டும். ஆட்டுப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல் அப்பகுதி மக்களைஏமாற்றி வருகின்றனர்.
சுப்பையா சாலையை சரி செய்ய போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மக்களை திரட்டி பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
புதுச்சேரியில் வழிப்பாட்டு தலங்களில் ஆடை கட்டுப்பாடு கொண்டுவர கவர்னர் சந்தித்து மனு அளிக்கப்படும் என தெரிவித்தார்.