/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் சாவு
/
திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் சாவு
ADDED : அக் 23, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : திருமணமாகத ஏக்கத்தில் வாலிபர் அதிகமாக மது குடித்து பரிதாபமாக இறந்தார்.
வில்லியனுார் அடுத்த மங்கலம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அழகுமுத்து 36, கொத்தனார். இவரது அண்ணன், அக்காவிற்கு திருமணமாகிவிட்டது. இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த அழகுமுத்து வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதிகமாக மது குடித்துவிட்டு வந்த அழகுமுத்து வீட்டு வாசலில் மயங்கி விழுந்து இறந்தார்.
இது குறித்து அவரது தந்தை கதிர்வேலு கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

