
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வீட்டில் இருந்து கோபித்து கொண்டு காணாமல் போன வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, பூமியான்பேட்டை, பாவாணர் நகரை சேர்ந்தவர் இளங்கோ மகன் கலைக்குமார், 34. இவர் கடந்த 1ம் தேதி குடும்பத்தில் ஏற்பட்டு பிரச்னையில், வீட்டில் உள்ளவர்களிடம் கோபித்து கொண்டு வெளியில் சென்றார். இதுவரை வீட்டிற்கு வராததால், அவரை உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

