லேப்ராஸ்கோப் முறையில் அட்ரினல் கட்டி அகற்றம் புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சாதனை
லேப்ராஸ்கோப் முறையில் அட்ரினல் கட்டி அகற்றம் புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை சாதனை
ADDED : ஜூன் 13, 2026 06:09 AM

புதுச்சேரி: கிட்னி மீது இருந்த 2 கிலோ எடையுள்ள அட்ரினல் கட்டியை லேப்ராஸ்கோப் முறையில் அகற்றி, ஈஸ்கோஸ்ட் மருத்துவமனை, அறுவை சிகிச்சை துறையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
புதுச்சேரி, மூலக்குளத்தில் உள்ள ஈஸ்கோஸ்ட் மருத்துவமனைக்கு சிறுநீர பாதிப்பு தொடர்பாக 39 வயது நபர் சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரை பரிசோதத்தில், கிட்டினி மீது 15 செ.மீ., நீளம், சுமார் 2 கிலோ எடையுள்ள அட்ரினல் கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அதன்படி, நோயாளியின் வயிற்றில் இருந்த 15 செ.மீட்டர் அளவிலான அட்ரினல் சுரப்பி கட்டி லேப்ராஸ்கோபி முறையில் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மூத்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் விஜய் ஓசா, பொது அறுவை சிகிச்சையை நிபுணர் ரெஹேனா மற்றும் மயக்கவியல் நிபுணர் ஜெயராம் அடங்கிய மருத்துவக் குழு மேற்கொண்டது. அறுவை சிகிச்சைக்குப் பின், நோயாளி விரைவாக குணமடைந்து வருகிறார்.
பெரிய அளவிலான அட்ரினல் கட்டிகளை லேப்ராஸ்கோபி முறையில் அகற்றுவது மிகவும் சவாலானது. சில அட்ரினல் கட்டிகள் அதிகளவில் அட்ரினலின் ஹார்மோனை சுரப்பதால், அறுவை சிகிச்சையின் போது உயிருக்கு ஆபத்தான வகையில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்த சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்க, சிறப்பு மயக்கவியல் மேலாண்மை, துல்லியமான முன்திட்டமிடல் மற்றும் அறுவை சிகிச்சை முழுதும் தொடர்ச்சியான தமனி வழி ரத்த அழுத்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை, மருத்துவக் குழுவின் திறமையையும், அனுபவத்தையும் மட்டுமல்லாமல், ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையின் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயர்தர நோயாளிகள் பராமரிப்பு வசதிகளையும் வெளிப்படுத்தியுள்ளது.
