நவீன மருத்துவ முன்னேற்றங்கள் தொடர் மருத்துவ கருத்தரங்கம்
நவீன மருத்துவ முன்னேற்றங்கள் தொடர் மருத்துவ கருத்தரங்கம்
ADDED : செப் 20, 2026 05:32 PM

புதுச்சேரி: இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை, சென்னை, எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை சார்பில் மருத்துவத்தில் நவீன முன்னேற்றங்கள் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகள் குறித்த தொடர் மருத்துவக் கருத்தரங்கம் நடந்தது.
புதுச்சேரி, தி ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் நடந்த கருத்தரங்கில் எஸ்.ஆர்.எம். மருத்துவமனை இரைப்பை மற்றும் கல்லீரல் மருத்துவத் துறையின் தலைவர் அருள்பிரகாஷ், இரைப்பை மற்றும் குடல் உள்நோக்கி பரிசோதனையின் நவீன முன்னேற்றங்கள், சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நவீன உள்நோக்கி பரிசோதனை முறைகள், அவற்றில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.
சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைத் துறை தலைவர் மணிகண்டன், ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் சிறுநீரக அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சையின் துல்லியம் மற்றும் நோயாளிகளுக்கான மேம்பட்ட சிகிச்சை அணுகுமுறைகள் குறித்து பேசினார்.
நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை ஆலோசகர் கிருஷ்ணகுமார், நரம்பியல் அறுவை சிகிச்சைகளின்போது முக்கியமான நரம்பு செயல்பாடுகளை பாதுகாப்பதற்கான நவீன அணுகுமுறைகள், நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
மூத்த முடக்குவாத சிகிச்சை ஆலோசகர் ஹேமா, முடக்குவாதத்திற்கான நவீன மருத்துவ அணுகுமுறை மற்றும் சிகிச்சை, நோயாளியின் மருத்துவ நிலையை முறையாக மதிப்பீடு செய்தல் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார்.
ஏற்பாடுகளை இந்திய மருத்துவ சங்க புதுச்சேரி கிளைத் தலைவர் சுதாகர் மற்றும் பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
