ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்க முப்பெரும் விழா
ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்க முப்பெரும் விழா
ADDED : செப் 20, 2026 05:23 PM

புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், அகில இந்திய ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில், முப்பெரும் விழா மற்றும் 20ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
திருநள்ளாறு அகில இந்திய தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சார்யார் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சிவசங்கர சர்மா, நாகர்கோவில் சங்க நிறுவனர் கணேஷ் சிவம், உயர்மட்ட ஆட்சி மன்ற குழு தலைவர் சீதாராம், துணைத் தலைவர்கள் செல்வகபிலன், தண்டபாணி, சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
பொதுச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பிச்சுமணி ஆண்டு வரவு, செலவு அறிக்கை வாசித்தார். இணை செயாளர் பாலசந்திர, துணை செயலாளர் செல்வசிதம்பரம், அமைப்பு செயலாளர் கணேஷ், செயற்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், சுகவனம், சிவா, உமாசங்கர், சுந்தரமூர்த்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
விழாவில், கீதாராம சிவாச்சார்யார் தொகுத்து எழுதிய நவக்கிரஹ பூஜா ஆராதனா, நட்சத்திர சாந்தி பரிகாரங்கள் எனும் புத்தகத்தை, கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவணமாணிக்கவாசக சுவாமிகள் வெளியீட்டார். சீனியர் வழக்கறிஞர் வள்ளியப்பன் பெற்றுக் கொண்டார்.
மூத்த சிவாச்சார்யார்களுக்கு ‘சிவகைங்கர்ய சூடாமணி விருது’ வழங்கப்பட்டது. முன்னதாக, சிதம்பர சிவாச்சார்யார் சிலையை மகாசதாசிவ பீடாதிபதி சுவாமிநாத சிவாச்சார்ய சுவாமிகள் திறந்து வைத்தார்.
விழாவில், பிள்ளையார்பட்டி, வேத சிவகாம பாடசாலை, முதல்வர் பிச்சை சிவாச்சார்யார், திருப்பரங்குன்றம், ஸ்கந்தகுரு வித்யாலயம், வேத சிவாகம பாடசாலை முதல்வர் ராஜா பட்டர், பெங்களூரு வேத சிவாகம சமஸ்கிருத பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி, கூனம்பட்டி ஆதீன திருமடம் நடராஜா சுவாமிகள், துாத்துக்குடி, ஆலால சுந்தர வேத சிவாகம பாடசாலை முதல்வர் செல்வம் பட்டர், வேலுார், இறைவன்காடு பிரசாத் சிவாச்சார்யார் துர்கா சுவாமிகள், திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவில் ரமேஷ் , தேவானுார், வேதசிவாகம பாடசாலை முதல்வர் ரமேஷ் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதியம் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கத்தின் 20ம் ஆண்டு அகில இந்திய பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஏற்பாடுகளை மாநில தலைவர் பாலசுப்ரமணியம், செயலர் அர்த்தநாரி, பொருளாளர் கீதாராம சிவாச்சார்யார், துணைத் தலைவர்கள் சிவராம சிவாச்சார்யார், திருஞானசம்பந்த சிவாச்சார்யார், துணை செயலாளர்கள் சக்தி, சபரிகிரீச சிவாச்சார்யார், கொள்கை பரப்பு செயலாளர் சேது சுப்ரமணிய சிவாச்சார்யார், செய்தி தொடர்பாளர் அரசு உட்பட புதுச்சேரி மற்றும் காரைக்கால் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
