ADDED : செப் 20, 2026 05:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். அமைச்சர் ராஜவேலு பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.
சங்கப் பொருளாளர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர்கள் திருநாவுக்கரசு, கோதண்டபாணி, துணைச் செயலர் சுரேஷ்குமார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அருள்ராசு, ராஜா, ஜெயந்தி ராஜவேலு, சிவேந்திரன், ஆனந்தராசன், இளங்கோவன், மடுகரை கோவிந்தசாமி மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு திருக்குறள் கூறினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
