ADDED : செப் 20, 2026 05:13 PM
அ நிறம் | அளவு
விபத்து அபாயம்: வில்லியனுாரில் போக்குவரத்து விதிமுறையை மீறி தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
தெரு நாய்கள் தொல்லை: காமராஜர் நகர் தொகுதி, ரெயின்போ நகர் 9வது குறுக்கு தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் குடியிருப்பவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
தமிழ், ரெயின்போ நகர்.
பயணியர் நிழற்குடை தேவை: நோணாங்குப்பம் ஆற்றுபாலம் அருகில் உள்ள பயணியர் நிழல்குடை சேதமடைந்துள்ளதால், புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரியம்மாள், நோணாங்குப்பம்.
போக்குவரத்து நெரிசல்: இ.சி.ஆர்., லாஸ்பேட்டை சாலையில் போக்குவரத்து நெரிசலில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாரதி, புதுச்சேரி.
