UPDATED : ஜூன் 07, 2026 10:14 PM
ADDED : ஜூன் 07, 2026 10:12 PM
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவின் 63-வது பிறந்த நாளையொட்டி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., க்கள், மீனவ தலைவர்கள் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவின் 63-வது பிறந்தநாள் அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, மணக்குள விநாயகர் கோவிலில் என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், வையாபுரி மணிகண்டன், மோகன்தாஸ், ஐயப்பன், ரவிக்குமார், என்.ஆர்.காங்., செயலாளர் ஜவகர் மற்றும் மீனவ பஞ்சாயத்து தலைவர் நிர்வாகிகள் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மேலும் அமைச்சரின் பிறந்த நாளையொட்டி, பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதேபோல், ஏனாமில் உள்ள அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
