ADDED : ஜூன் 07, 2026 10:22 PM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: பிரதமர் மோடியின் 12ம் ஆண்டு சாதனையையொட்டி, பா.ஜ., சார்பில் நோணாங்குப்பம் அரசு பள்ளியில் துாய்மை செய்யும் பணி நடந்தது.
மணவெளி தொகுதி பா.ஜ., சார்பில் தவளக்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் அரசு துவக்கப் பள்ளியில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுகுமாறன், பொறுப்பாளர் செந்தாமரைக் கண்ணன், தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், பொறுப்பாளர் சக்தி பாலன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
