நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சமூக நலத்துறை மற்றும் சாரோன் சிறப்பு பள்ளி சார்பில், சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தை பராமரிப்பு சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
எல்லைப்பிள்ளைச்சாவடி சமூக நலத்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சமூக நலத்துறை இயக்குனர் ராகினி தலைமை தாங்கினார்.
துணை இயக்குநர் கனகராஜ், கள அதிகாரி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சாரோன் சொசைட்டி ஆஃப் பாண்டிச்சேரி நிறுவனர் மோகன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு சட்ட பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

