/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாதுகாப்பாக ஓட்டளிப்பது குறித்து ஆலோசனை
/
பாதுகாப்பாக ஓட்டளிப்பது குறித்து ஆலோசனை
ADDED : மார் 21, 2024 07:44 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் பொதுமக்கள் பாதுகாப்பாக ஓட்டளிப்பது குறித்த,தேர்தல் ஆலோசனைக்கூட்டம், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையடுத்து மாநிலம் முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்,போலீஸ்துறை மூலம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், பொதுமக்கள் அச்சம்,பதற்றம் இன்றி வாக்களிக்க செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில், நடந்தது.
கூட்டத்தில், உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, மாவட்ட துணை தேர்தல் அதிகாரி வினயராஜ், போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

