/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை தொடர்பாக ஆலோசனை
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை தொடர்பாக ஆலோசனை
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை தொடர்பாக ஆலோசனை
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை தொடர்பாக ஆலோசனை
ADDED : டிச 05, 2025 07:20 AM

புதுச்சேரி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பரிசோதனை செய்வது தொடர்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை வரும் 8ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பரிசோதனை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், என்.ஆர்.காங்., கட்சியின் பிரதிநிதியாக கோபி, காங்., சார்பில் பெத்தபெருமாள், சுவாமிநாதன், தி.மு.க., தாமோதரன், பா.ஜ., சக்திவேல், அ.தி.மு.க., கமல்தாஸ், மோகன்தாஸ், பா.ம.க., சத்தியநாராயணன், இந்திய கம்யூ., கொளஞ்சியப்பன், பகுஜன் சமாஜ் பாலமுருகன், ஆம் ஆத்மி ரவீந்திரன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் முதற்கட்ட பரிசோதனை செயல் விளக்கம் குறித்து, பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், துணை மாவட்ட தேர்தல் அதிகாரி சிவசங்கரன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

