/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கவர்னர் மாளிகை ' லோக் நிவாஸ் ' என பெயர் மாற்றம்
/
புதுச்சேரி கவர்னர் மாளிகை ' லோக் நிவாஸ் ' என பெயர் மாற்றம்
புதுச்சேரி கவர்னர் மாளிகை ' லோக் நிவாஸ் ' என பெயர் மாற்றம்
புதுச்சேரி கவர்னர் மாளிகை ' லோக் நிவாஸ் ' என பெயர் மாற்றம்
ADDED : டிச 05, 2025 07:12 AM

புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகையின் ராஜ் நிவாஸ் பெயர் 'லோக் நிவாஸ்' (மக்கள் மாளிகை) என மாற்றப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது.
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என்றும், அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுநர்களின் மாளிகைகள் 'ராஜ் நிவாஸ்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
தமிழக கவர்னர் ரவி கவர்னர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தார்.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி நாடு முழுதும் கவர்னர் மாளிகைகளின் பெயர் மாற்றத்திற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மேற்கு வங்கம், தமிழகத்தில் உள்ள ராஜ்பவன்கள், 'லோக் பவன்' என்று பெயர் மாற்றம் முதற்கட்டமாக செய்யப்பட்டது.
அதையொட்டி, 250 ஆண்டுகள் பழமை வாய்ந் த கட்டடத்தில் செயல்படும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் மாளிகையின் ராஜ் நிவாஸ் பெயர் 'லோக் நிவாஸ்' (மக்கள் மாளிகை) என்று நேற்று முதல் மாற்றப்பட்டு மாளிகையின் முகப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது.

