/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சத்துணவு தோட்டம் அமைக்கும் பயிற்சி
/
சத்துணவு தோட்டம் அமைக்கும் பயிற்சி
ADDED : டிச 05, 2025 07:08 AM

புதுச்சேரி: குருமாம்பட்டில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சத்துணவு தோட்டம் அமைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
குருமாம்பட்டு, காமராஜர் வேளான் அறிவியல் நிலையத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சத்துணவு தோட்டம் அமைப்பதற்கான இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. அதில், சத்துணவு தோட்டம் அமைப்பதற்கு உரம் தயாரித்தல், மண் கலவை தயார் செய்தல், இயற்கை முறை பூச்சிக் கட்டுப்பாடு செய்தல், காய்கறி விதைப்பதற்கான காலங்களை தேர்வு செய்தல், போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுனர்கள் பொம்மி, சந்திரநாதன், குழு செயலாளர் பூரராவன், நிலைய முதல்வர் ரவி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

